இலங்கையில் அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க அதிரடி திட்டம்
15 மார்கழி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 169
அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுமைகளைத் தழுவி, மனித வளத்தில் முதலீடு செய்து, GeoAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அபாயத்தை ஆயத்தமாக மாற்றுவதன் மூலம் அனர்த்தங்களைத் தாங்கும் திறன் இலங்கைக்கு ஏற்படும் என அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஏ.ஹொவெல தெரிவித்துள்ளார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு, தரவு நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவை தற்போது மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan