இந்தியாவில் குழந்தைகளுக்கான மின்சார டர்ட் பைக்கை அறிமுகம் செய்த Hero Vida
15 மார்கழி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 138
இந்தியாவில் Vida Dirt.E K3 எனும் குழந்தைகளுக்கான மின்சார டர்ட் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Hero Motocorp நிறுவனத்தின் மின்சார பிரிவான விடா (Vida), இந்தியாவில் புதிய Dirt.E K3 மின்சார டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு விலை ரூ.69,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக், 4 முதல் 10 வயது குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தங்கள் மோட்டார் விளையாட்டு பயணத்தை பாதுகாப்பாகத் தொடங்கும் வகையில், ஜேர்மனியில் உள்ள Hero Tech Centre மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள Innovation Centre இணைந்து உருவாக்கியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் உள்ள Vida தொழிற்சாலையில் இந்த பைக்கின் உற்பத்தி நடைபெறவுள்ளது.
முக்கிய அம்சங்கள்
மூன்று நிலை அட்ஜஸ்டபிள் சிஸ்டம் - சீட் உயரம் மற்றும் வீல் பேஸ் மாற்றி, இந்த பைக்கை குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப பல ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
350W மோட்டார் (500W peak Output) மற்றும் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய 360Wh Removable Battery கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை 3 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
Beginner (8 km/h), Amateur (16 km/h), Pro (25 km/h) என மூன்று ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Dedicated App: இந்த செயலியின் மூலம் பெற்றோர் வேகத்தை கட்டுப்படுத்த, மோடுகளைத் தடை செய்ய, குழந்தையின் பயணத்தை கண்காணிக்கலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்: 16 அங்குல சக்கரங்கள், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், குழந்தைகளுக்கான பிரேக் லிவர், magnetic lanyard kill switch ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த பைக், Red, Purple, White நிறங்களில் கிடைக்கும்.
குழந்தைகளுக்கான முதல் மின்சார டர்ட் பைக் என்ற வகையில், இந்திய சந்தையில் Vida Dirt.E K3 புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan