Paristamil Navigation Paristamil advert login

பூரன் கடைசிவரை களத்தில் நின்று போராடியும் தோல்வி - தாக்கிய பத்திரனா

பூரன் கடைசிவரை களத்தில் நின்று போராடியும் தோல்வி - தாக்கிய பத்திரனா

15 மார்கழி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 133


ILT20 தொடர் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஷார்ஜா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் குவித்தது. சார்லஸ் 53 பந்துகளில் 77 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணியில் வசீம் (44), பேர்ஸ்டோவ் (31) நல்ல தொடக்கம் அமைத்தனர். ஆனால், நிக்கோலஸ் பூரன் மட்டும் நின்று ஆட, பொல்லார்ட் (1), ஷெபர்ட் (2) ஆகியோர் சொதப்பினர்.

அதிரடி வீரர் டாம் பென்டனின் விக்கெட்டை (11 ஓட்டங்கள்) பத்திரனா கைப்பற்ற, தில்லோன் 13 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிடையர் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

அடுத்து பந்து டாட் ஆக, மூன்றாவது பந்தும் சிக்ஸர் ஆக மாறியது. அடுத்த இரண்டு பந்துகளை சித்திக் டாட் ஆக வீச, கடைசி பந்தில் பூரன் சிக்ஸர் விளாசினார்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 168 ஓட்டங்களே எடுக்க, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வெற்றி பெற்றது.

கடைசிவரை போராடிய பூரன் 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் குவித்தார். ரஸா, சித்திக் தலா 2 விக்கெட்டுகளும், பத்திரனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

29 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்