குளிர் காலநிலையால் அமெரிக்காவில் விமான சேவைகள் பாதிப்பு
15 மார்கழி 2025 திங்கள் 09:01 | பார்வைகள் : 1684
அமெரிக்காவில் குளிர்கால காலநிலை காரணமாக முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களிலும், பிலடெல்பியா (Philadelphia) சர்வதேச விமான நிலையத்திலும் தரைவழி நிறுத்தங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
JFKவிற்கு வருகை தந்த 1000இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையம் 700க்கும் மேற்பட்ட விமான தாமதங்களை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமும் கணிசமான தரைவழி தாமதங்களை அறிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan