பா.ஜ., தேசிய செயல் தலைவராக பீஹார் அமைச்சர் நிதின் நியமனம்; நட்டா பதவிக்காலம் முடிந்தது
15 மார்கழி 2025 திங்கள் 08:08 | பார்வைகள் : 818
பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பீஹார் அமைச்சர் நிதின் நபின், 45, கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜ., தேசிய தலைவராக, 2020 ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின்படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
கடந்த 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை.
இந்நிலையில், பா.ஜ., தேசிய செயல் தலைவராக, அக்கட்சியைச் சேர்ந்த பீஹார் சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நிதின் நபினை நியமித்து, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan