சிட்னி தாக்குதலில் உயிரிழந்த இளம் பிரெஞ்சு குடிமகன்!!
14 மார்கழி 2025 ஞாயிறு 20:10 | பார்வைகள் : 680
சிட்னியில் நடைபெற்ற யூத விரோத பயங்கரவாத தாக்குதலில், 27 வயதுடைய பிரெஞ்சு இளைஞரும் பொறியாளருமான டான் எல்கயாம் (Dan Elkayam) உயிரிழந்துள்ளார்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருந்த அவர், ஹனுக்கா (Hanoukka) பண்டிகையின் முதல் நாளில் பொண்டி கடற்கரை (Bondi Beach-Sydney) அருகே நடைபெற்ற வெளிப்புற யூத விழாவில் கலந்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் (ஆஸ்திரேலியா சிட்னி நேரப்படி) ,கறுப்பு ஆடை அணிந்த இரண்டு தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; ஒருவன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான், மற்றொருவன் கைது செய்யும் போது கடுமையாக காயமடைந்துள்ளான்.
தாக்குதலுக்குப் பிறகு டான் எல்கயாமை கண்டுபிடிக்க அவரது உறவினர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ந போது, அவர் உயிரிழந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு விவகார அமைச்சர் ஜோன்-நோயல் பரோ "அவரது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும், துயரில் மூழ்கியுள்ள யூத சமூகத்துடனும், ஆஸ்திரேலிய மக்களுடனும் நாங்கள் இணைந்து இரங்குகிறோம்.” என தெரிவித்துள்ளார் .
பரிஸ் பகுதியில் வளர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய டான் எல்கயாம், பயணங்களை விரும்பியவர்; சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan