மும்பையில் குடியேறிய சமந்தா!
14 மார்கழி 2025 ஞாயிறு 15:15 | பார்வைகள் : 704
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெப் சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மீடியாக்களுக்கு தெரியாமல் சத்தம் இல்லாமல் நடத்தி முடித்த சமந்தா, அதன்பிறகு தனது இணையப் பக்கத்தில் அதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அதோடு, இந்த இரண்டாவது திருமணத்திற்கு பிறகு மும்பையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் கணவருடன் குடியேறி இருக்கிறார் சமந்தா. இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் வந்துள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது சமந்தாவிடத்தில் மீடியாக்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது, அவர்களை கண்டு கொள்ளாமல் இருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan