Paristamil Navigation Paristamil advert login

30 வகையான ஏவுகணைகள் 450 ட்ரோன்கள் - உதவி கோரும் ஜெலென்ஸ்கி

30 வகையான ஏவுகணைகள் 450 ட்ரோன்கள் - உதவி கோரும் ஜெலென்ஸ்கி

14 மார்கழி 2025 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 383


உக்ரைன் மீது ஒரே இரவில் 450 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் கிட்டத்தட்ட 450 க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் 30 வகையான ஏவுகணைகளையும் ரஷ்யா பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் இந்த மிகப்பெரிய தாக்குதல் உக்ரைனின் மின் கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் பொதுமக்களுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், ஒடேசா பகுதியில் 2 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மின் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்பட்டதால் ஒடேசா, சுமி, கார்கிவ், கெர்சன் ஆகிய பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளனர்.

தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல்களை சமாளிக்க அதிகமான சர்வதேச ஆதரவையும், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்குமாறு உக்ரைனிய ஜனாதிபதி நட்பு நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பெரிய அளவிலான தாக்குதல், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்பதை காட்டுவதற்கான தெளிவான சான்று என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்