அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
14 மார்கழி 2025 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 197
அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் மாநிலம், Providence நகரில் உள்ள Brown University வளாகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Barus & Holley கட்டிடம் (பொறியியல் மற்றும் இயற்பியல் துறை) அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Kassar House (கணிதத் துறை) மற்றும் பல வளாக பகுதிகளில் பொலிஸார், FBI, SWAT குழுக்கள் விரைவாக நுழைந்து மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பல மாணவர்கள் பொது பேருந்துகளில் வெளியேற்றப்பட்டனர்.
Nelson Fitness Center அருகே மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறும் காட்சிகள் பதிவாகின.
காயமடைந்தவர்கள் Rhode Island வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Providence பொலிஸ், “சந்தேக நபர் வளாகத்தை விட்டு Hope Street வழியாக சென்றார்” எனக் கூறி CCTV காட்சிகளை வெளியிட்டது.
FBI மற்றும் உள்ளூர் பொலிஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளாகம் முழுவதும் மஞ்சள் பாதுகாப்பு டேப் கட்டப்பட்டு, மாணவர்கள் காவல்துறையினரால் பாதுகாப்பாக வழிநடத்தப்பட்டனர்.
இந்த சம்பவம், Brown University மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி வளாகங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து அமெரிக்காவில் மீண்டும் பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு விவாதம் எழுந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan