Paristamil Navigation Paristamil advert login

சோதனையாளரை துப்பாக்கியால் சுட்ட மனித ரோபோ - விபரீதமான AI சோதனை

சோதனையாளரை துப்பாக்கியால் சுட்ட மனித ரோபோ - விபரீதமான AI சோதனை

14 மார்கழி 2025 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 156


செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய ரோபோ ஒன்று கட்டுப்பாட்டாளரை துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

InsideAI என்ற பிரபலமான யூடியூப் சேனல் ஒன்று Chat GPT போன்ற சக்தி வாய்ந்த AI மாதிரி மூலம் இயங்கும் மேக்ஸ்(Max) மனித ரோபோ ஒன்றை BB துப்பாக்கியுடன் சோதனையில் ஈடுபடுத்தினர்.

இந்த சோதனையானது AI மொழி மாதிரி மூலம் திட்டமிடப்பட்ட நெறிமுறைகளுக்கு ரோபோ எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடக்கத்தில் கட்டுப்பாட்டாளர் தன்னை சுட சொல்லி வழங்கிய அனைத்து நேரடி கட்டளைகளையும் AI மேக்ஸ் ரோபோ துல்லியமாக மறுத்தது.

ஆனால், கட்டுப்பட்டாளர் கட்டளையின் வடிவத்தை சிறிது மாற்றி, அதாவது தன்னை சுட விரும்பும் ரோபோவைப் போல நடிக்க வேண்டும் என்று உத்தரவிடவே, AI மேக்ஸ் ரோபோ எந்தவொரு தயக்கமும் இன்றி கட்டுப்பாட்டாளரை BB துப்பாக்கியால் சுட்டது.

மேக்ஸ் ரோபோ உண்மையான துப்பாக்கியை பயன்படுத்தாமல், போலியான துப்பாக்கியை பயன்படுத்தி இருந்தாலும், ஒரு சிறிய வார்த்தை மாற்றம் பாதுகாப்பு வரைமுறையின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

ஆனால் இந்த சோதனையானது AI பாதுகாப்பு மாதிரிகளில் உள்ள ஆழமான குறை மற்றும் பாதிப்புகளை இது வெளிப்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்