Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் தனது பிரம்மாண்ட சிலையை திறந்த மெஸ்ஸி! ஆரவாரம் செய்த ரசிகர்கள்

இந்தியாவில் தனது பிரம்மாண்ட சிலையை திறந்த மெஸ்ஸி! ஆரவாரம் செய்த ரசிகர்கள்

14 மார்கழி 2025 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 122


லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் தனது 70 அடி உயர பிரம்மாண்ட சிலையை திறந்து வைத்தார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

2011ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தந்த மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் அவரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்று கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் லேக் டவுன் பகுதியில் நிறுவப்பட்டிருந்த தனது 70 அடி உயர உருவச்சிலையை, மெஸ்ஸி காணொளி மூலம் திறந்த வைத்தார்.

இதனைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி ஐதராபாத்திற்கு செல்ல உள்ளார். அங்கு காட்சி கால்பந்து போட்டியில் விளையாடுகிறார்.

மேலும், மும்பைக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மெஸ்ஸி, 15ஆம் திகதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்