Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸியை காண திருமணத்தை விட்டுவிட்டு வந்த புதுமணத்தம்பதி

மெஸ்ஸியை காண திருமணத்தை விட்டுவிட்டு வந்த  புதுமணத்தம்பதி

14 மார்கழி 2025 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 127


மேற்கு வங்கத்தில் மெஸ்ஸியைக் காண வந்த ரசிகர்கள் கூறிய விடயங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

கொல்கத்தாவின் மைதானத்திற்கு வந்த லியோனல் மெஸ்ஸி சிறிது நேரத்தில் கிளம்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், அவரை காண முடியாததால் ரசிகர்கள் பலரும் வன்முறையில் இறங்கினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்கு முன்பாக, சில ரசிகர்கள் மெஸ்ஸியை காண தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை துறந்துவிட்டு வந்ததை தெரிவித்தனர்.

ரசிகர் ஒருவர், "மெஸ்ஸி வருகிறார் என்றவுடன் நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம். இன்று எனக்கு திருமணம். அதை விட்டுவிட்டு, இங்கே ஓடி வந்திருக்கிறேன். ஆனால், என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவில்லை. அவரை பார்க்க முடியவில்லை" என வருத்தம் தெரிவித்தார்.

அதேபோல் கரண் என்ற ரசிகர் தனது மனைவியுடன் மெஸ்ஸியைப் பார்க்க வந்திருந்தார்.

அவர் கூறியபோது, "எங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. ஆனால், மெஸ்ஸியின் வருகைக்காக எங்கள் தேனிலவுத் திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். 

ஏனென்றால், முதலில் நாங்கள் மெஸ்ஸியைப் பார்க்க விரும்பினோம். அவரைப் பார்ப்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும், நாங்கள் 10-12 ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்ந்து வருகிறோம்" என்றார்.

நாங்கள் 2010 முதல் மெஸ்ஸியைப் பின்தொடர்ந்து வருகிறோம் என்று அவரது மனைவியும் தெரிவித்தார்.

அதேபோல் நேபாளத்தைச் சேர்ந்த ஆயுஷ் என்ற ரசிகர், மெஸ்ஸியைப் பார்ப்பது ஒரு குழந்தைப் பருவக் கனவு என்றும், இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்றும் கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்