Paristamil Navigation Paristamil advert login

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா கடைசி போட்டி

WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா கடைசி போட்டி

14 மார்கழி 2025 ஞாயிறு 11:20 | பார்வைகள் : 139


WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார்.

ஹாலிவுட் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் ஜான் சீனா, WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி அவரது கடைசிப்போட்டி 14-12-2025 நடைபெற்றது. இதில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் ஜான் சீனா மோதினார்.

ஆனால், டேப் அவுட் முறையில் இந்தப் போட்டியில் ஜான் சீனா தோல்வியுற்றார். இத்துடன் அவரது 23 ஆண்டுகால WWE சகாப்தம் முடிவுக்கு வந்தது.

எல்லா காலத்திலும் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஜான் சீனா. 2005யில் முதல் வெற்றியை (WrestleMania 21) சாம்பியன் பட்டத்தை வென்ற இவர், மொத்தமாக 17 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

மேலும் 2009, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சிறந்த சூப்பர் ஸ்டார் உட்பட 10 முறை Slammy விருது வென்றிருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்