அப்பாவாக போகும் நாக சைதன்யா?
14 மார்கழி 2025 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 712
தெலுங்கு பிரபல நடிகரான நாக சைதன்யா பல தெலுங்கு படங்கள் மூலம் சினிமா வந்தார். அவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன். நாகை சைதன்யா 2017 ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் மிகப் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. அதற்குப் பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சமந்தா தனியாகவே மன வேதனையுடன் வாழ்ந்து வந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளை கையாண்டார். அதில் ஒன்று தான் ஜிம் ஒர்க் அவுட். இப்போது சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ராஜ் நிடிமோருவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
எதிர்பாக்காத வகையில் நாக் சைதன்யா சோபிதாவை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இருவருக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இருவரும் மணமக்களாக கோயிலுக்கு சென்று சாமி குடும்ப எல்லா போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் வெளியிட்டு இருந்தனர்.
சோபிதா படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகிற்கும் மற்றும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக அதிகளவில் பிரபலமானார். அவர் மீது காதல் கொண்ட நாக சைதன்யா அவரை திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவுக்கும் சோபித்தாவுக்கும் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சோபிதா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் தான் அப்பாவாக இருப்பதாகவும், இதைப் பற்றி அறிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan