Paristamil Navigation Paristamil advert login

உதயநிதியை நினைத்து கர்வமாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

உதயநிதியை நினைத்து கர்வமாக உள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

14 மார்கழி 2025 ஞாயிறு 12:05 | பார்வைகள் : 314


துணை முதல்வர் உதயநிதியின் பணிகளை பார்த்து பெருமையாகவும், கர்வமாகவும் உள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துஉள்ளார்.

தி.மு.க., இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, திருவண்ணாமலையில் இன்று நடக்கஉள்ளது.

பாச உணர்வு


அதை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

 

எல்லாரது குடும்பத்திலும், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று இருப்பர். தி.மு.க.,விலும் அதே பாச உணர்வுடன் பழக வேண்டும் என்று தான், 'உடன்பிறப்பே' என்று உறவு கொண்டாடுகிறோம்.

தி. மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, இளைஞரணியினர் அனைவரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று, பாசறைப் பக்கம் துவங்கி, சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த, 'அறிவுத் திருவிழா' வரை ஏராளமான முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறார்.

அதேபோல, அடிமட்ட அளவில் களப்பணி செய்ய நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம் என்று, நிர்வாகிகள் பட்டியலையும் காண்பித்தார்.

அதைப் பார்த்தபோது, 45 ஆண்டுகளுக்கு முன், 1980ல் நாங்கள் இளைஞரணி துவங்கியபோது, எப்படி பெருமையாக இருந்ததோ, அதேபோல பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.

அடுத்த தலைமுறை தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள், 'திராவிடம்' எனும் மக்களுக்கான கொள்கையை பேசப் போகின்றனர். தி.மு.க., எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் கடமை, இளைஞரணிக்கு உண்டு.

இன்று, இந்தியாவிலேயே தமிழகம் தனித்தன்மையோடு இருக்கிறது. அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் வரப் போகின்றனர் என்பதை நினைத்து, எனக்கு பெருமையா க இருக்கிறது.

சென்னையில் அறிவுத் திருவிழா நடந்தபோது, தலைநகரில் மட்டும் இப்படி நிகழ்ச்சி நடத்துகின்றனரே, மற்ற பகுதிகளில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

வடக் கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கான அழைப்பிதழை உதயநிதி என்னிடம் கொடுத்து, வார்டு, கிராம அளவில் அறிவுத் திருவிழா நடக்கவுள்ளது என்று சொன்னது, மிக்க ம கிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்