கருணாநிதி தவிர வேறு புலவரே தி.மு.க.,வுக்கு தெரியாது: சீமான்
14 மார்கழி 2025 ஞாயிறு 11:05 | பார்வைகள் : 185
தி.மு.க.,வினருக்கு கருணாநிதி தவிர வேறு புலவரே தெரியாது,” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசு ஏற்கனவே, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை, கூடுதலாக்கி உள்ளனர்.
திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும், ஒரு நாளைக்கு, 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் தமிழக பெண்கள் உள்ளனர்.
பெருமைக்குரிய தமிழ் இனத்தின் பெண்களை, இப்படி கையேந்த செய்து விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்ப டுகிறேன். போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்; மின்சார துறையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன். இந்த கேடுகெட்ட கேவலமான ஆட்சி முறையை சாதனை என்கின்றனர்.
மூன்று முறை 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறை ரெய்டு வந்ததும், பிரதமரை போய் சந்திக்கிறார்.
பாரதி விழாவில் நான் பங்கேற்று பேசியதை விமர்சிக்கின்றனர். ஆனால், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் திராவிடர் கழகம் போல் ஒரு சமூக இயக்கம் தான்' என சொன்னது யார்?
ஆர்.எஸ்.எஸ்., சார்ந்த 'விஜில்' இலக்கிய அமைப்பினர், பாரதி குறித்து பேச என்னை அழைத்தனர். நான் அங்கு சென்று பேசினேன். திராவிட இயக்கத்தினரையும், பாரதி குறித்து கூட்டம் போட சொல்லுங்கள்; அங்கும் சென்று பேசுகிறேன்.
தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் முருகன் என இருவரும் பங்கேற்கும் நிலையில், தி.மு.க., அமைச்சர்களும், கூட்டணியை சேர்ந்த எம்.பி., கமலும் கலந்து கொள்கின்றனர். இது எந்த வகையில் சரி?
பாரதியாரை பாடாத தமிழன் எவன் இருக்க முடியும். அவரை, பாடாத தமிழன், உயிரோடு ஏன் இருக்க வேண்டும். தி.மு.க.,வினருக்கு கருணாநிதியை தவிர, வேறு புலவனே கிடையாது; தெரியாது.
மக்கள் வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்களுக்கு, ஜாதி, மதம், கடவுள் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. இத்தனை ஆண்டு இல்லாமல், திடீரென முருகன் மேல் ஏன் இந்த பக்தி? தேர்தல் வரப் போவதால், இந்த சேட்டை. அயோத்தியில் ராமரை வைத்து, பா.ஜ., அரசியல் செய்தது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்டவரை வெற்றி பெற வைத்து, பா.ஜ.,வை எதிர் அணியினர் தோற்கடித்து விட்டனர். இதேபோல தான் இங்கும் நடக்கும். தமிழகத்தில் முருகனை கையில் எடுத்து அரசியல் செய்கிறது பா.ஜ., குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும், பா.ஜ., எண்ணம் நடக்காது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இரு சமய தலைவர்களை அழைத்து பேசி, இரு மத வழிபாடுகளையும் நடத்த பரிந்துரை செய்திருக்க வேண்டும். பிரச்னை ஆக்கியதே தி.மு.க., அரசின் காவல் துறை தான்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தி.மு.க.,தான் பாதுகாப்பு என நினைக்கின்றனர். ஆனால், பா.ஜ.,வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பதே தி.மு.க., தான். இவ்வாறு அவர் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan