Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா ராய் திருமண வாழ்வில் சிக்கலா? அபிஷேக் பச்சன் கொடுத்த பதில்!

ஐஸ்வர்யா ராய் திருமண வாழ்வில் சிக்கலா? அபிஷேக் பச்சன் கொடுத்த பதில்!

13 மார்கழி 2025 சனி 16:26 | பார்வைகள் : 300


அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2007ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அபிஷேக் – ஐஸ்வர்யா இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் பரவின.

திருமண விழாவுக்கு கூட பச்சன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா வராமல் மகளுடன் தனியாக வந்தார் என்றும், அபிஷேக் பச்சனுக்கு வேறு ஒரு நடிகையுடன் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐஸ்வர்யா ராய் தனது கணவரின் இளம் வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதன் மூலம் விவாகரத்து தகவலுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என இணையவாசிகள் கூறி வந்தனர்.

ஆனால் இவர்களின் விவாகரத்து குறித்த செய்தி ஓய்ந்ததாக தெரியவில்லை. சமூக வலைத்தளத்தில் வரும் விவாகரத்து செய்திகளுக்கு அபிஷேக் பச்சன் ஆதரவாக பதிவிட்டு வருகிறார் என்றும், ஐஸ்வர்யா ராய் தனது பெயருக்கு பின்னால் இருந்த பச்சனை நீக்கிவிட்டார் என்றும், இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் பலவாறு இவர்களின் விவாகரத்து குறித்த வதந்தி பரவி வருகிறது.

இந்நிலையில் 'Pepping Moon' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இந்த விவாகரத்து செய்திகள் குறித்து பேசியிருக்கிறார். அதில், "நாங்கள் இருவரும் திருமணம் செய்யும் முன் எங்கள் திருமணத்தை முடிவு செய்த அவர்கள், தற்போது எப்போது விவாகரத்து செய்வோம் என்று அவர்களே முடிவு செய்கிறார்கள். முட்டாள்தனமான செயல் இது.

மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்க்கை நடத்தும் எங்கள் இருவருக்கும் உண்மை என்னவென தெரியும். இது மாதிரியான வதந்திகளை நாங்கள் பார்ப்பதில்லை. எனினும், எங்களைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் இதுபோன்ற முட்டாள்தனமாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எந்தப் பொய்யையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கோபமாக தெரிவித்து விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்