விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?
13 மார்கழி 2025 சனி 15:26 | பார்வைகள் : 173
செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகாகி, தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி போன்ற படங்களில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2010-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்து பிரிந்த அடுத்த வருடமே கீதாஞ்சலி என்பவரை கரம்பிடித்தார் செல்வராகவன். இந்த ஜோடிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும் ஒரு இயக்குனர் தான். இவர் செல்வராகவனிடம் மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். கீதாஞ்சலி கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த மாலை நேரத்து மயக்கம் என்கிற திரைப்படத்தையும் இயக்கினார். அதன்பின்னர் சினிமா பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.
செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அவர்களைப் பற்றிய விவாகரத்து சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு காரணம் கீதாஞ்சலியின் செயல் தான். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதனால் தான் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. அவர் எதற்காக செல்வராகவன் போட்டோக்களை நீக்கினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
செல்வராகவனின் தம்பி தனுஷும் அண்மையில் தான் விவாகரத்து பெற்றார். அவர் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான 18 வருட திருமண வாழ்க்கையை கடந்த 2022-ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார். தனுஷுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார். தனுஷை போல் செல்வராகவனும் விவாகரத்து முடிவை எடுத்துவிட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் செல்வராகவன் அல்லது அவரது மனைவி கீதாஞ்சலி விளக்கம் அளிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan