மெஸ்ஸியின் இந்திய வருகை - கொல்கத்தா மைதானத்தில் குழப்பம்
13 மார்கழி 2025 சனி 11:38 | பார்வைகள் : 1185
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அர்ஜண்டீனாவின் கால்பந்தாட்ட அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்திற்கு வெள்ளிக்கிழமை (12) வருகை தந்திருந்த போது அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லியோனல் மெஸ்ஸி வெள்ளிக்கிழமை சால்ட் லேக் மைதானத்தை அடைந்த பின்னர் அவரது வாகனம் மைதானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், அவர் வெளியேறிய அடுத்த நொடிகளில், பிரபலங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
இதனால் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்பட்டு, மைதானத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
மெஸ்ஸியின் உத்தியோகபூர்வக் குழுவில் இல்லாதவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு ஏற்பாட்டாளர் பொது அறிவிப்பு விடுத்த போதும் அந்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. கூட்டம் முன்னால் திரண்டது. பலர் லியோனல் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்கவும், கையெழுத்து வாங்கவும் முயன்றதால், அந்தச் சூழல் பாதுகாப்பற்றதாக மாறியது.
"மெஸ்ஸி, மெஸ்ஸி" என்ற கோஷங்கள் மைதானத்தில் எதிரொலிக்க, மெஸ்ஸி சிறிது தூரம் மட்டுமே மைதானத்திற்குள் நடந்து சென்று இரசிகர்களைப் பார்த்துச் சுருக்கமாகக் கை அசைத்தார்.
இருப்பினும், கூட்டத்தின் அழுத்தம் தீவிரமடைந்து, நிலைமை கட்டுப்பாட்டை மீறுவது போல் தோன்றியதால், லியோனல் மெஸ்ஸி அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan