Paristamil Navigation Paristamil advert login

17 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி - 433 குவித்த இந்தியா

17 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி - 433 குவித்த இந்தியா

13 மார்கழி 2025 சனி 08:15 | பார்வைகள் : 121


14 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், வைபவ் சூர்யவன்ஷி 17 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்துள்ளார்.

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 12-12-2025 தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

 

முதல் போட்டியில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணி மோதியது. நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 433 ஓட்டங்கள் குவித்துள்ளது.

 

அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி, 95 பந்துகளில், 9 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள் உட்பட 171 ஓட்டங்கள் குவித்தார்.

 

434 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 41 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து, 147 ஓட்டங்கள் மட்டுமே குவித்துள்ளது.

 

433 ஓட்டங்கள் குவித்துள்ளதன் மூலம், U19 ஆசிய கோப்பையில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

 

மேலும் வைபவ் சூர்யவன்ஷி 171 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், U19 ஆசிய கோப்பையில் ஒரு இந்தியர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

முன்னதாக 2016 ஆம் ஆண்டு கொழும்பில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹிமான்ஷு ராணா 130ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

 

மேலும், U19 ODI போட்டியில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

 

முன்னதாக 2008 ஆம் ஆண்டில். நமீபியாவிற்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹில் 12 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

 

தற்போது 17 ஆண்டுகள் கழித்து, 14 சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை ,முறியடித்துள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்