மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
13 மார்கழி 2025 சனி 05:20 | பார்வைகள் : 133
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்குவதற்கு என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2027 ம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பானது, முதல்முறையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது. தரவுகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் டிஜிட்டல் முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது.
முதல் கட்டமாக 2026 ஏப்., முதல் செப்டம்பர் வரையிலும்
இரண்டாம் கட்டமாக 2027 பிப்ரவரியிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan