Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பேரிடர் - மேல் மாகாணத்தில் குவிந்துள்ள 40,000 மெட்ரிக் டன் குப்பைகள்

இலங்கையில் பேரிடர் - மேல் மாகாணத்தில் குவிந்துள்ள 40,000 மெட்ரிக் டன் குப்பைகள்

12 மார்கழி 2025 வெள்ளி 13:54 | பார்வைகள் : 2510


ஏற்பட்ட பேரிடர் நிலைமையை தொடர்ந்து, மேல் மாகாணத்தில் மட்டும் சுமார் 40,000 மெட்ரிக் டன் குப்பைகள் குவிந்துள்ளன.

கொடிகாவத்தை, முல்லேரியா, கொலன்னாவை மற்றும் கடுவெல ஆகிய உள்ளூராட்சி பிரதேசங்களில் அதிக அளவு குப்பைகள் குவிந்துள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் சதுரு கஹந்தவ ஆராச்சி தெரிவித்தார்.

இருப்பினும், இன்னும் சிறிய அளவிலான குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட கம்பளை நகரில், 400 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான குப்பைகள் குவிந்துள்ளாதாக தெரிவித்தார்.

கம்பளை, நிதஹஸ் மாவத்தையில் குப்பைகள் குவிந்துள்ளதால், அந்தப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்