Paristamil Navigation Paristamil advert login

இல்-து-பிரான்சின் முதல் கேபிள் கார் C1 நாளை முதல் ஆரம்பம்!!

இல்-து-பிரான்சின் முதல்  கேபிள் கார் C1 நாளை முதல் ஆரம்பம்!!

12 மார்கழி 2025 வெள்ளி 08:21 | பார்வைகள் : 5448


இல்-து-பிரான்சின் முதல் நகர்ப்புற கேபிள்காரான C1 (premier téléphérique), 2025 டிசம்பர் 13 சனிக்கிழமை  காலை 11:00 மணிக்குத் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. 

கிரெதெய் (Créteil) முதல் வில்லெனூவ்-சாங்-ஜார்ஜ் (Villeneuve-Saint-Georges) வரை 4.5 கிலோமீட்டர் தொலைவை 18 நிமிடங்களில் கடக்கும் இந்த கேபிள் கார், மொத்தம் ஐந்து நிலையங்களுக்கு சேவையளிக்கும். 

  1. புவாங்க்-து-லாக் (Pointe-du-Lac), 
  2. லிமெயில்-ப்ரேவான்ஸ் (Limeil-Brévannes),
  3. வளெந்தொன் (Valenton), 
  4. லா வெஜிடேல்  (La Végétale)
  5. வில்லா நோவா (Villa Nova)

10 இருக்கை கொண்ட, முழுமையாக அணுகக்கூடிய கேபின்கள் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு முறை சேவையை வழங்கும். கிரெதெய் ஏரி, பசுமைப் பூங்காக்கள், காடுகள் போன்ற இடங்களை மேலிருந்து பார்க்கும் வசதியையும் இது அளிக்கிறது.

இந்த புதுமையான போக்குவரத்து முறை, லிமெயில்-ப்ரேவான்ஸ் (Limeil-Brévannes), வளெந்தொன் (Valenton) மற்றும் வில்லெனூவ்-சாங்-ஜார்ஜ் (Villeneuve-Saint-Georges) போன்ற பகுதிகளின் இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

பயணிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய மையங்களுக்கு எளிதில் செல்ல முடியும். தினமும் சுமார் 11 000 பயணிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படும் கேபிள் கார் C1, இல்-து-பிரான்சில் அறிமுகமாகும் முதல் கேபிள் கார் எனும் வரலாற்றுப் பெருமையை பெறுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்