Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - அலறி அடித்து ஓடிய மக்கள்

ரஷ்யாவின் மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - அலறி அடித்து ஓடிய மக்கள்

12 மார்கழி 2025 வெள்ளி 04:50 | பார்வைகள் : 708


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகின்றது.

 

இதன்போது பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன.

 

தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

 

தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

 

இச்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள்.

 

எனினும் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்ததுடன் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்