Paristamil Navigation Paristamil advert login

விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: த.வெ.க.,

விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: த.வெ.க.,

12 மார்கழி 2025 வெள்ளி 09:28 | பார்வைகள் : 1527


சென்னை - பனையூரில் உள்ள, த.வெ.க., தலைமை அலுவலகத்தில், நேற்று, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது.

இதில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. எனவே, பொதுச் செயலர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட, த.வெ.க.,வின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'ஊழல் மலிந்த தி.மு.க., ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக, விஜயை முதல்வராக ஏற்று, அவரது தலைமையை விரும்பி வருவோரை, கூட்டணிக்கு அரவணைப்போம். த.வெ.க.,வின் கூட்டணி குறித்து, அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்