Paristamil Navigation Paristamil advert login

‘ஜனநாயகன்’ படத்தின் கதை இதுவா?

‘ஜனநாயகன்’ படத்தின் கதை இதுவா?

11 மார்கழி 2025 வியாழன் 15:08 | பார்வைகள் : 225


விஜய் நடிப்பில் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாக கூடிய திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பற்றி பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்தப் படம் தான் விஜய்க்கு கடைசி படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இந்தப் படம் ஆளாகியிருக்கிறது. 

ரசிகர்களும் படத்தை காண ஆர்வமாக இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கப்போவதில்லை என்பது தான் அனைவருக்கும் வருத்தமாக உள்ளது. இதுவரை எந்தவொரு விஜய் படத்திற்கும் இல்லாத அளவுக்கு ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் டிசம்பர் 27 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்க இருக்கின்றது.

விஜயை பார்ப்பதற்காக அங்கு டிக்கெட் புக்கிங்கும் வேகமாக நடந்து வருகின்றது. மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அந்த அரங்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை உட்காரலாம் என்பதால் இந்த இசை வெளியீட்டுவிழாதான் இதுவரை நடந்ததில் பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது.

எச்.வினோத்தை பொறுத்தவரைக்கும் அவர் சொன்ன தேதியில் படத்தை எடுக்க கூடியவர். ஆனால் ஜன நாயகன் படத்திற்கு 110 நாள்கள் கால்ஷீட் கொடுத்தாராம். ஆனால் படத்தை எடுத்து முடிப்பதற்கு 140 நாள்கள் ஆகிவிட்டதாம். அதற்கு காரணம் அரசியல் சார்ந்த சில விஷயங்கள் அதாவது தேர்தல் , ஓட்டுச்சாவடி பற்றிய விஷயங்களை சமீபத்தில் சேர்த்திருக்கிறார்கள். 

மேலும் இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பதால் தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக ஓப்பனிங் சீன், இடைவேளை, ப்ரீ கிளைமாக்ஸில் மட்டும் கொஞ்சம் மாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஜனநாயகன் என பெயர் வைத்திருப்பதால்  படத்தில் அரசியல் சார்ந்த பல விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் சொல்ல வரும் கருத்தே good touch , bad touch பற்றித்தான் சொல்லியிருக்கிறார்களாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்