2026 பாரிஸ் நகராட்சித் தேர்தல்கள் : 6 000 நகர்ப்புற காவல் துறையினரை அதிகரிக்க திட்டம்!!
11 மார்கழி 2025 வியாழன் 15:07 | பார்வைகள் : 3549
பரிஸ் மேயர் பதவிக்குப் போட்டியிடும் பியர்-ஈவ் போர்னசல் (Pierre-Yves Bournazel), தலைநகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அவர் நகர்புற காவல்துறையினர் எண்ணிக்கையை 2 200 இலிருந்து 6 000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளார். ட்ரோன்கள், அல்கோரிதம் வீடியோ கண்காணிப்பு (vidéosurveillance algorithmique), ஆட்சேர்ப்புக்கான புதிய போலீஸ் அகாடமி, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தேசிய காவல்துறையினரை இணைக்கும் முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், காவல்துறையினரின் அதிகாரங்களை பலப்படுத்தி, பொதுநிலங்களில் குற்றங்களை கண்டுபிடிக்க, வீடியோ கண்காணிப்பைப் பார்வையிட, போதை மற்றும் மது சோதனைகள் செய்ய அனுமதிக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கண்காணிப்பைத் தொடர்ந்து, ஒரு ட்ரோன் செயல்பாடுகளுக்காக ஒரு படையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan