Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மாணவர்களுக்கு இறுதித் தவணைப் பரீட்சை இல்லை!

இலங்கை மாணவர்களுக்கு இறுதித் தவணைப் பரீட்சை இல்லை!

11 மார்கழி 2025 வியாழன் 15:13 | பார்வைகள் : 2032


இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை இடம்பெறாது என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் இருக்குமாயின் அது குறித்து பாடசாலையில் கலந்துரையாட முடியுமே தவிர, மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பரீட்சைகள் இடம்பெற மாட்டாது என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சில மாகாணப் பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அந்த வினாத்தாள்களைக் கலந்துரையாட முடியுமே தவிர, பரீட்சை நடத்த முடியாது எனவும் அமைச்சுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மூன்றாம் தவணைக்குரிய தவணைப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த முறை பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்