Paristamil Navigation Paristamil advert login

காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

11 மார்கழி 2025 வியாழன் 13:13 | பார்வைகள் : 703


பழைய சோறு என்பது முந்தைய நாள் சமைத்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடும் பாரம்பரிய உணவு முறையாகும். இது தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். காலையில் இந்த பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரவு முழுவதும் ஊறுவதால், சாதத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி, புரோபயாட்டிக் உணவாக மாறுகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

பழைய சோறு உடலின் வெப்பநிலையை குறைத்து, கோடை காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

இதில் இரும்புச்சத்து மற்றும் பிற தாதுக்கள் அதிகரிப்பதால், இது நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்கி, சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக உணர செய்கிறது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோபயாட்டிக் பண்புகள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

எனவே, இந்த எளிய மற்றும் செலவு குறைவான பழைய சோறு, காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த பாரம்பரிய உணவாகும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்