உக்ரைனில் தேர்தல் நடத்தத் தயார் - ஜெலன்ஸ்கி அறிவிப்பு
11 மார்கழி 2025 வியாழன் 08:57 | பார்வைகள் : 243
போா் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் உக்ரைனில் தோ்தலை நடத்தத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த விமா்சனத்தைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, உக்ரைனில் தோ்தல் நடத்துவது குறித்து அந்த நாட்டு மக்கள்தான் கேள்வியெழுப்ப வேண்டும்.
அடுத்த நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு அந்த உரிமையில்லை. இருந்தாலும், எங்கள் கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதைக் கேட்தால் சொல்கிறேன், போா்க் காலத்திலும் உக்ரைனில் தோ்தல் நடத்தத் தயாராக இருக்கிறேன்.
அதற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். அத்துடன் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், அடுத்த 60 முதல் 90 நாட்களுக்குள் தோ்தல் நடத்தப்படும்.
விரைவில் இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றாா் அவா். ஜெலன்ஸ்கியின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் முடிந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு தோ்தல் குறித்து ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள முதல் முக்கிய அறிவிப்பு இதுவாகும்.
ஜனநாயகம் பற்றி உக்ரைன் பேசுகிறது. ஆனால் போரைக் காரணம் காட்டி அங்கு தோ்தல் நடத்தப்படாமலேயே உள்ளது. இது ஜனநாயகம் இல்லை’ என்று ட்ரம்ப் முன்னர் விமா்சித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், அமெரிக்காவும், ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தோ்தலை நடத்தத் தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி தற்போது அறிவித்துள்ளாா்.
லண்டனில் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், ஜேர்மன் சான்சலா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோரை சந்தித்து ரஷ்யாவுடனான போா் நிறுத்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு திரும்பும்போது தோ்தல் குறித்த இந்த அறிவிப்பை ஸெலென்ஸ்கி வெளியிட்டாா்.
ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பு, போரின் நான்காவது ஆண்டில் ஏற்பட்ட முக்கிய அரசியல் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘இது உக்ரைனின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்’ என்று பாராட்டினார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan