Paristamil Navigation Paristamil advert login

3.2 லட்சம் ஓட்டுகள் த.வெ.க.,வில் அடையாள அட்டைகளால் கட்சியினர் மகிழ்ச்சி

3.2 லட்சம் ஓட்டுகள் த.வெ.க.,வில் அடையாள அட்டைகளால் கட்சியினர் மகிழ்ச்சி

11 மார்கழி 2025 வியாழன் 08:16 | பார்வைகள் : 154


த.வெ.க., வில் இதுவரை 2.2 லட்சம் பேருக்கு கியூ.ஆர்., கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் பேருக்கும் இது வழங்கப்பட உள்ளதால், வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 3.2 லட்சம் ஓட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.வெ.க.,வினர் கணக்கிடுகின்றனர்.

ஆலோசனை

முதல்முறையாக சட்ட சபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக, மாநில மாநாடு, நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், சுற்றுப்பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கட்சியின் தலைவர் விஜய்.

புதுச்சேரியில் த.வெ.க., பொதுக்கூட்டம் நடத்தியிருக்கும் கட்சியின் தலைவர் விஜய், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதனிடையே, தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கியூ.ஆர்., கோடுடன் கூடிய அடையாள அட்டையை த.வெ.க., வழங்கி வருகிறது.

கடந்த மாதம் 1.2 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நேற்று த.வெ.க.,வின் 1,921 நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் அதை சார்ந்த 21,150 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 231 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இன்னும் ஒரு லட்சம் பொறுப்பாளர்களுக்கும் கியூ.ஆர்., கோடு உடன் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன.

'கியூ.ஆர்., கோடு'


இது குறித்து கட்சி நிர்வாகி கூறுகையில், 'இரு மாதங்களில் மட்டும் கட்சி நிர்வாகிகளுக்கென 2.2 லட்சம் பேருக்கு கியூ .ஆர்., கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

'அடுத்தடுத்தும் அடையாள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்படும். கட்சிக்கென 3.2 லட்சம் ஓட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்து உள்ளது' என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்