Paristamil Navigation Paristamil advert login

அமித்ஷா அருமையான பேச்சு : லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

அமித்ஷா அருமையான பேச்சு : லோக்சபா உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

11 மார்கழி 2025 வியாழன் 07:16 | பார்வைகள் : 139


லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கிய உரையை அருமையான பேச்சு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரது பேச்சு, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. லோக்சபாவில் நடந்த நேற்றைய விவாதத்தில், உரையாற்றிய அமித் ஷா, தேசிய பாதுகாப்பு, உள்துறை நடவடிக்கைகள், அரசின் சாதனைகளை விளக்கியதுடன், எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, விரிவாக விளக்கினர். அவரது இந்த உரையை, பிரதமர் மோடி 'அருமையான பேச்சு ' என பாராட்டி உள்ளார்.

சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 'அமித் ஷாவின் பேச்சு மிக சிறப்பானது. தேசிய நல்லனுக்கான முக்கியமான அம்சங்களை திறம்பட எடுத்துரைத்துள்ளார். அரசின் நிலைப்பாட்டை, தெளிவாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். உண்மைகளை துல்லியமாக சுட்டிக் காட்டிய உரை இது '. என பாராட்டி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்