தேர்தலில் வெற்றி பெற தி.மு.க., புது வியூகம்
11 மார்கழி 2025 வியாழன் 05:16 | பார்வைகள் : 141
தி.மு.க., கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற திட்டத்தின் கீழ், தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., சார்பில், 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 68,463 ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தடப் பணியை மேற்கொள்ள, ஓட்டுச்சாவடி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
வரும் தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., வியூகம் அமைத்துள்ளது. அதற்காக, நேற்று முதல் ஜன., 10ம் தேதி வரை, ஒரு மாத காலத்திற்கு, ஓட்டுச்சாவடி வாரியாக, தமிழகம் முழுதும் கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட உள்ளன.
இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மயிலாப்பூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடி, தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில், முதல்வர் பங்கேற்றார்.
அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை பெற, கட்சியினர் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், தான் ஓட்டளிக்கும் ஓட்டுச் சாவடியில், 440 ஓட்டுகள் பெற, கட்சியினருக்கு இலக்கு நிர்ணயித்தார்.
அதன்பின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'எந்த ஷா வந்தாலென்ன; எத்தனை திட்டம் போட்டாலென்ன; டில்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகத்திற்கு வர நினைத்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், எங்களின் கருப்பு சிவப்பு படை, தக்க பாடம் புகட்டும். தமிழகம் என்றைக்குமே ஆணவம் பிடித்த டில்லியின் கட்டுப்பாட்டிற்கு வெளியே தான்' என கூறியுள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan