Paristamil Navigation Paristamil advert login

55 வயதில் ஓய்வூதியம்! - ”வேண்டாம்!” என தடுத்து நிறுத்தும் நீதிமன்றம்!!

55 வயதில் ஓய்வூதியம்! - ”வேண்டாம்!” என தடுத்து நிறுத்தும் நீதிமன்றம்!!

11 மார்கழி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 817


விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான துப்பரவு பணியாளர்களுக்கான பணிசெய்யும் காலத்தை குறைக்க வேண்டும் எனும் கோரிக்கையை Cour des comptes நீதிமன்று விமர்சித்துள்ளது.

CRPN என அழைக்கப்பட்டும் விமானிகள் மற்றும் விமான விமான குழு கொண்ட பிரிவுக்கு அவர்களது பணியின் சிரமம் காரணமாக சேவைக்காலத்தைக் குறைக்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரான்சின் உச்ச தணிக்கை நீதிமன்றம் (Cour des comptes),

“ஓய்வூதிய வயதெல்லை 55 ஆக இருப்பது பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான ஊதியம் மிக அதிகம் என்பதால் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் காலமும் அதிகரிக்கும். இதனால் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த தொழிலின் நிலைத்தன்மையை பலவீனப்படுத்தும்!” என Cour des comptes சுட்டிக்காட்டியுள்ளது.

பயணிகள் விமானங்களுக்கான விமானிகள் 62 ஆவது வயதிலும், வணிக விமானங்களுக்கான பயணிகள் 58.5 வயதிலும் ஓய்வூதியம் பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்