சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை
10 மார்கழி 2025 புதன் 16:38 | பார்வைகள் : 166
சீனாவில் இலஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கமைய, அரசு நிதி நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் ஒருவருக்கு 9.12.2025 காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018க்கு இடையில் பல திட்டங்களை செயற்படுத்தவும் அதற்கு நிதி அளிப்பதற்கும் அவர் பெருமளவில் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் 156 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் வாங்கிய குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் கடந்த மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan