எந்த இந்தியரும் செய்யாத சாதனையை படைத்த பும்ரா, திலக் வர்மா
10 மார்கழி 2025 புதன் 16:38 | பார்வைகள் : 462
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், திலக் வர்மா மற்றும் பும்ரா எந்த இந்தியரும் செய்யாத சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான முதல் T20 போட்டி நேற்று கட்டாக்கில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175, ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 59 ஓட்டங்கள் குவித்தார்.
176 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 12.3 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 74 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி, 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
74 ஓட்டங்களளில் சுருண்டதன் மூலம், T20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி எடுத்த மிக குறைவான ஓட்டம் என்ற மோசமான சாதனையை படைத்தது.
முன்னதாக 2022 ராஜ்காட்டில் நடைபெற்ற போட்டியில், 87 ஓட்டங்கள் எடுத்ததே அணியின் குறைந்த ஓட்டமாக இருந்தது.
இதில், திலக் வர்மா 32 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 26 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த இளம் வயது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
23 ஆண்டுகள் மற்றும் 31 நாட்களில் இந்த சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். முன்னதாக, அபிஷேக் சர்மா 25 ஆண்டுகள் மற்றும் 65 நாட்களில் 1,000வது டி20 ஓட்டங்களை கடந்து இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
இதே போல், நேற்றைய போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்திய ஐஸ்பிரித் பும்ரா, T20 போட்டிகளில் 100 விக்கெட்களை 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக அர்ஷ்தீப் சிங் 100 T20 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
மேலும், டெஸ்ட், ODI, T20 என 3 வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை கைப்பற்றிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா நேற்றைய போட்டியில், 4 கேட்ச் பிடித்தன் மூலம், ஒரு T20 போட்டியில் அதிக கேட்ச் பிடித்த 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், தோனி 5 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
ஹர்திக் பாண்டியா, 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், 100 T20 சிக்ஸர்களை எட்டி, அதிக T20 சிக்ஸர்கள் விளாசிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
205 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும், 155 சிக்ஸர்களுடன் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திலும், 124 சிக்ஸர்களுடன் விராட் கோலி 3 வது இடத்திலும் உள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan