இயற்கை பேரிடர் நிவாரணம் - இலக்க மாற்றம் மூலம் யாழில் இடம்பெறும் மோசடி
10 மார்கழி 2025 புதன் 15:38 | பார்வைகள் : 853
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெலஉறுமய கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நெடுந்தீவு பிதேசத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழறுபடி நடந்துள்ளது.
நெடுந்தீவு பிதேசத்தில் 1,216 வீடுகள் அழிந்துள்ளதாகவும் 304 இலட்சம் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கண்கெடுப்பின் பிரகாரம் 893 வீடுகளே காணப்படுகின்றன. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி 1,216 வீடுகள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிட முடியும்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 893 வீடுகளே இருந்துள்ளன. இது எப்படி டிசம்பர் மாதம் 1,216 ஆக அதிகரித்தது. நெடுந்தீவில் உள்ள மக்கள் தீவுகளை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்வது வழமையாகும்.
மேலும் அதை அண்டிய பிரதேசங்களான வேலணை பிதேசத்தில் 544 வீடுகளே அழிவடைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கண்கெடுப்பின் பிரகாரம் 4,379 வீடுகள் உள்ளன. காரைநகரில் 2025 ஆம் ஆண்டு 3,527 இருந்த நிலையில் 668 வீடுகள் ‘டித்வா’ பேரிடரில் அழிந்துள்ளன.அத்தோடு நல்லூரில் 791 வீடுகள் அழிந்துள்ளன. மொத்த வீடுகளின் எண்ணிக்கை 18,614 ஆகும்.
ஏனைய பிரதேசங்களின் நிலைமை இவ்வாறு இருக்கும் நிலையில் நெடுந்தீவு கணக்கெடுப்பில் இலக்கங்களில் குழறுபடி இருப்பதாலே எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
நெடுந்தீவில் அனைத்து வீடுகளும் அழிந்துள்ள நிலையில் இருந்ததை விட அதிகரித்தது எப்படி. இந்த ஊழலை அரசாங்கம் அறிந்து கொள்வதற்கு முன் நாம் கண்டுபிடித்துள்ளோம்.இதை ஜனாதிபதியின் கவனத்திற்கும் தெரியபடுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan