Paristamil Navigation Paristamil advert login

விஜய் தேவரகொண்டா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி?

விஜய் தேவரகொண்டா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி?

10 மார்கழி 2025 புதன் 15:18 | பார்வைகள் : 721


தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது ரவிகிரண் கோலா இயக்கத்தில் 'ரவுடி ஜனார்த்தனன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். முதல் முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர் என்பவர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளமாக தர தயாராகவுள்ளனர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தெலுங்கில் 'உப்பனா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்