புளோரிடாவில் வீதியில் தரையிறங்கிய விமானம் கார் மீது மோதி விபத்து
10 மார்கழி 2025 புதன் 13:20 | பார்வைகள் : 4500
புளோரிடாவில் வீதியில் தரையிறங்கிய விமானம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார்.
அப்போது, விமானம் சாலையில் சென்ற கார் மீது மோதியது. இதன்போது காரை ஓட்டி சென்ற 57 வயது பெண் லேசான காயமடைந்தார்.
விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததுடன் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan