Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் நட்பு நாடு அமெரிக்கா - பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலின் நட்பு நாடு அமெரிக்கா - பிரதமர் நெதன்யாகு

10 மார்கழி 2025 புதன் 06:04 | பார்வைகள் : 161


அமெரிக்காவிற்கு இஸ்ரேலை விட சிறந்த நட்பு நாடு இல்லை உலகத் தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு உள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இஸ்ரேல் பாராளுமன்றில் , பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது, யூத அரசுக்கு எதிராக யூத எதிர்ப்பு அலை இருந்தபோதிலும் , பல நாடுகள் மற்றும் தலைவர்களிடமிருந்து முன்னோடியில்லாத ஆதரவைப் பெறுகிறது.

 

இந்திய பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது.

 

இஸ்ரேல் இன்று வலிமையான நாடாகவுள்ளது. பல உலகத் தலைவர்கள் எங்களைத் தேடி வருகின்றனர். நமது மகத்தான சாதனைகளைப் பார்க்க வேண்டும்.

 

இரண்டு ஆண்டுகள் போரில் ஈடுபட்ட போதிலும் இஸ்ரேல் இராஜதந்திர ரீதியாகவும் , இராணுவ ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

நான் எனது பழைய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடிக்கடி பேசுகிறேன்.

 

விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம் அதிக மக்கள் தொகையை கொண்ட ஒரு பெரிய நாடு இந்தியா எங்களுடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறது . இஸ்ரேலுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு இல்லை.

 

அமெரிக்காவிற்கு இஸ்ரேலை விட சிறந்த நட்பு நாடு இல்லை . உலகம் முழுவதும் யூத விரோதத்தை நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம் . இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்