AI வளர்ச்சிக்காக 380 பில்லியன் டொலர் முதலீடு - Microsoft, Meta, Amazon, Alphabet முன்னிலை
2 கார்த்திகை 2025 ஞாயிறு 08:26 | பார்வைகள் : 777
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான Microsoft, Meta, Amazon மற்றும் Alphabet ஆகியவை செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்காக மொத்தமாக 380 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்த முதலீடுகள், AI சேவைகளுக்கான முடிவற்ற தேவையை கருத்தில் கொண்டு, கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக செலவிடப்படுகின்றன.
Amazon
அமேசான் நிறுவனத்தின் CFO Brian Olsavsky, AI-யில் “மிகப்பெரிய வாய்ப்பு” இருப்பதாக கூறி, இந்த ஆண்டில் 125 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதலீடு இன்னும் கூடுதலாக இருக்கும் என் அதெரிவித்துள்ளார்.
CEO Andy Jassy, AI மற்றும் core infrastructure-க்கான தேவை அதிகரித்துள்ளதாக கூறினார்.
Alphabet (Google)
கூகுள் CEO சுந்தர் பிச்சை, 2025-ல் capex செலவுகளை 91 முதல் 93 பில்லியன் டொலராக உயர்த்தியுள்ளார். கூகுளின் CFO Anat Ashkenazi, 2026-ல் மேலும் அதிக முதலீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.
Meta
Zuckerberg தலைமையில், Facebook, Instagram, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் AI ஒருங்கிணைக்கப்படுகிறது. 2025 capex செலவு 70 முதல் 72 பில்லியன் டொலராக இருக்கும். 2026-ல் அதைவிட வேகமாக வளர்ச்சி ஏற்படும் என Meta தெரிவித்துள்ளது.
Microsoft
முதல் காலாண்டில் (Q1) 35 பில்லியன் டொலர் முதலீடு செய்த Microsoft, 2026-ல் capex 94 பில்லியன் டொலராக உயரலாம் என அதன் CFO Amy Hood கூறியுள்ளார்.
Morgan Stanley கணிப்பின் படி, 2028-ல் முடிவடையும் வரை தொழில்நுட்ப நிறுவனங்கள் 3 டிரில்லியன் டொலர் வரை data center முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
ஆனால், AI-யின் விளைவுகள் குறித்த தெளிவான ஆதாரங்கள் இல்லாததால், சில நிபுணர்கள் “AI bubble” பற்றி எச்சரிக்கின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan