ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?
1 கார்த்திகை 2025 சனி 15:55 | பார்வைகள் : 196
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் தங்கள் கெரியர் தொடக்கத்தில் ஒன்றாக இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் என பல படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் பிரிந்து தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 45 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
ஆனால் அவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் தீராத ஆசையாக இருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நீண்ட காலம் கழித்து படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நல்ல கதையும் இயக்குனரும் அமையவேண்டும்’ எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் அந்த படத்தை நெல்சன் இயக்கவேண்டும் என ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதற்குக் கமல்ஹாசனும் ஒத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இப்போதைக்குக் கொடுக்கவேண்டாம் என்றும் ஜெயிலர் 2 ரிலீஸானதும் பார்த்துக்கொள்ளலாம் எனவும் நெல்சன் ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த படத்தின் அப்டேட் வந்தால் ‘ஜெயிலர் 2’வுக்கான எதிர்பார்ப்புக் குறையும் என்பதால் அப்படி சொல்லி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan