பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
1 கார்த்திகை 2025 சனி 12:55 | பார்வைகள் : 255
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை போட்டியாளர் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டனர். இதில் நிகழ்ச்சி தொடங்கிய நான்காவது நாளே, உடல்நலக்குறைவு காரணமாக நந்தினி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் முதல் வார இறுதியில் மக்கள் அள்ளித்த வாக்குகள் அடிப்படையில் கம்மியான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டாவது வாரத்தில் அப்சராவும், மூன்றாவது வாரம் ஆதிரையும் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நான்காவது வாரம் யார் எலிமினேட் ஆனார் என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் நாமினேஷனில் விஜே பார்வதி, கலையரசன், கம்ருதீன், கானா வினோத், அரோரா ஆகிய ஐந்து பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். இவர்களில் கானா வினோத், அரோரா, கம்ருதீன் ஆகியோர் அதிக வாக்குகள் வாங்கி இருப்பதால் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள கலையரசன் மற்றும் விஜே பார்வதி தான் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். இதனிடையே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.
இதனால் கலையரசன் மற்றும் பார்வதி இருவரும் எலிமினேட் ஆகப்போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதெல்லாம் வெறும் புரளி தானாம். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இல்லை. டேஞ்சர் ஜோனில் உள்ள இருவரில் கலையரசனை விட விஜே பார்வதி அதிக வாக்குகள் வாங்கி இருப்பதால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கலையரசன் எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் வெற்றிபெற்று அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்றிருந்த கலையரசன், இந்த வாரம் தப்பித்திருந்தால், அடுத்த வாரம் நாமினேஷனிலேயே வந்திருக்கமாட்டார். ஆனால் அவருக்கு லக் இல்லாமல் போய் இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியும் இருக்கப் போகிறது. அதன்படி இந்த வாரம் சீரியல் நடிகை திவ்யா கணேஷ், நட்சத்திர தம்பதிகளான பிரஜன் மற்றும் சாண்ட்ரா, சீரியல் நடிகர் அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளார்களாம். இந்த நான்கு பேரின் வைல்டு கார்டு எண்ட்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் இருக்கும் என கூறப்படுகிறது. அவர்களின் எண்ட்ரிக்கு பிறகாவது ஆட்டம் சூடுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.-


























Bons Plans
Annuaire
Scan