Paristamil Navigation Paristamil advert login

தோல்வியை தழுவிய இந்தியா - முடிவுக்கு வந்த சிவம் துபேவின் 2151 நாள் உலக சாதனை

தோல்வியை தழுவிய இந்தியா - முடிவுக்கு வந்த சிவம் துபேவின் 2151 நாள் உலக சாதனை

1 கார்த்திகை 2025 சனி 07:07 | பார்வைகள் : 131


அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது T20 போட்டியில் தோற்றதன் மூலம், சிவம் துபேவின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான 2வது T20 போட்டி, இன்று மெல்போர்னில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக, அபிஷேக் சர்மா 68 ஓட்டங்களும், ஹர்ஷித் ரானா 35 ஓட்டங்களும் குவித்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.  

தொடர்ந்து, 126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 13.2 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இந்திய அணி தோற்றதன் மூலம் சிவம் துபேவின் 2151 நாள் உலக சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் சிவம் துபே பங்குபெற்ற ஒரு T20 போட்டியில் கூட இந்திய அணி தோற்றதில்லை.

கடைசியாக டிசம்பர் 2019 ஆம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் பங்குபெற்ற போட்டியில் இந்திய அணி தோற்றது.

சிவம் துபே விளையாடிய கடைசி 37 T20 போட்டிகளில் இந்திய அணி தோற்றதே இல்லை. 34 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் முடிவும் கிடைக்கவில்லை.

இதே போல் அணியின் மற்றொரு வீரரான பும்ரா, விளையாடிய 24 T20 போட்டிகளில் இந்திய அணி தோற்றதே இல்லை.

இந்த போட்டியில் இந்திய அணி தோற்றதன் மூலம், இருவரின் சாதனையும் முடிவிற்கு வந்துள்ளது.  

தோல்வியே இல்லாமல் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்களில் பட்டியலில், 37 போட்டிகளுடன் சிவம் துபே முதலிடத்தில் உள்ளார்.

27 போட்டிகளுடன் உகாண்டாவின் பாஸ்கல் முருங்கி 2வது இடத்திலும், 24 போட்டிகளுடன் ஜஸ்பிரித் பும்ரா 3வது இடத்திலும் உள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்