Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

1 கார்த்திகை 2025 சனி 11:47 | பார்வைகள் : 168


முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கு மற்றுமொரு சான்றாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். போர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்ஜின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது.

மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழகத்தின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.அடுத்த தலைமுறை இஞ்ஜின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள போர்டின் முடிவானது, தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது. தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்