காதலியை கரம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்!
31 ஐப்பசி 2025 வெள்ளி 15:33 | பார்வைகள் : 2182
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம் பிடித்தார். இவர்கள் இருவரது திருமணம், இன்று சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
படத்தின் சக்ஸஸ் மீட்டிலேயே காதலிக்கு கல்யாணம் குறித்த புரபோசலை கூறிய அபிஷன், அக்டோபர் 31-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டிருந்தார். அவர் சொன்னது போலவே, இன்று அகிலா மற்றும் அபிஷன் திருமணம் பிரமாண்டமாக பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அபிஷன் திருமணத்திற்காக, 'டூரிஸ்ட் ஃபேமிலி ' பட தயாரிப்பாளர் MRP Entertainment தலைவர் மகேஷ் ராஜ் பசிலியான் ரூ.1 கோடி மதிப்புள்ள BMW காரை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, அபிஷனின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில், ஒரு சிறு ரோலில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த அபிஷன், தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து வரும் படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan