Paristamil Navigation Paristamil advert login

இந்திய வீசா வழங்கல் தொடர்பில் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவித்தல்

இந்திய வீசா வழங்கல் தொடர்பில் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவித்தல்

31 ஐப்பசி 2025 வெள்ளி 13:06 | பார்வைகள் : 193


எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நேரடியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.

விசா உள்ளிட்ட சேவைகளை முன்னெடுத்த IVS Lanka என்ற நிறுவனத்துடனான ஒப்பந்தம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, விசா உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான புதிய முன்பதிவுகளுக்கான புதிய இணையத்தள இணைப்பு விரைவில் வௌியிடப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்