Paristamil Navigation Paristamil advert login

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன முன்னாள் இந்திய வீரர்

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன முன்னாள் இந்திய வீரர்

31 ஐப்பசி 2025 வெள்ளி 09:06 | பார்வைகள் : 126


ஐபிஎல் தொடர்களில், 2012, 2014, 2014 என 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணி, 2025 ஐபிஎல் தொடரில் 8வது இடத்தை பிடித்தது.

2022 ஐபிஎல் தொடர் முதல் KKR அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் இருந்து வந்தார்.

சமீபத்தில் அவர் பயிற்சியாளர் பதிவியில் இருந்து விலகிய நிலையில், கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

முன்னதாக 2024 ஆம் ஆண்டில் KKR அணி கோப்பை வென்ற போது, கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில், அபிஷேக் நாயர் பயிற்சி குழுவில் இருந்தார்.

அதன் பின்னர் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான பின்னர், அபிஷேக் நாயரும் இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அபிஷேக் நாயர் தற்போது பெண்களுக்கான பிரீமியர் லீக்(WPL) தொடரில் உபி வாரியார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்