அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக டிரம்ப் மிரட்டல்
31 ஐப்பசி 2025 வெள்ளி 08:06 | பார்வைகள் : 878
ரஷியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்ட நிலையில் பதிலுக்கு தாங்களும் அணு ஆயுத சோதனையில் இறங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுவித்துள்ளார்.
ஐ.நா. அமைப்பு உலக நாடுகளுக்கு அணு ஆயுத சோதனை மீது தடை விதித்துள்ள நிலையில், ரஷியா–உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் பல தோல்வியடைந்துள்ள நிலையில், ரஷியா தற்போது தனது அணுசக்தி வலிமையை வெளிப்படுத்தும் வகையில் புதிய ஆயுத சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.
அதிநவீன ‘புரெவெஸ்ட்னிக்’ (Burevestnik) எனப்படும் “பறக்கும் அணுஉலை” என அழைக்கப்படும் அணுசக்தி ஏவுகணையை ரஷிய ராணுவம் சோதனை செய்துள்ளது. இது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரஷியா மீண்டும் ஒரு அணுசக்தி ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. ‘போசைடன் சூப்பர் டார்பிடோ’ எனப்படும் நீர்மூழ்கி அணு டிரோன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
“இந்த டிரோனில் அணு உலையை விட 100 மடங்கு சக்திவாய்ந்த அணு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தச் சோதனைக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது வலைத்தளப் பதிவில் அவர்,
“அமெரிக்காவே உலகின் மிக அதிக அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு. ரஷியாவின் தொடர் சோதனைகள் 5 ஆண்டுகளில் அமெரிக்காவை ஈடு செய்யக்கூடும். இதனால் நமது ராணுவத்துறைக்கு அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan