பிரபலத்தன்மை! - பிரான்சுவா ஒலோந்துவை நெருங்கிய மக்ரோன்!
31 ஐப்பசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2982
ஐந்தாம் குடியரசு ஜனாதிபதிகளில் மிக மோசமான செல்வாக்கு இழப்பைச் சந்தித்த ஜனாதிபதிகளில் பிரான்சுவா ஒலோந்தும் (François Hollande) ஒருவர். அவரது இடத்தை தற்போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நெருங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் செல்வாக்கு குறித்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்ல், அவர் 11% சதவீத பிரபலத்தன்மையை (popularité) பெற்றுக்கொண்டுள்ளார். மிக மோசமடைந்து வரும் அரசியல்வாதிகளின் பட்டியலில் மக்ரோன் முதலிடத்தில் உள்ளார். மிகவும் நலிவடைந்த செல்வாக்கை பிரெஞ்சு மக்களிடம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துவின் செல்வாக்கும் இந்த புள்ளியாக குறைந்திருந்தது. அந்த நிலையை அவருக்கு அடுத்ததாக வந்த ஜனாதிபதி மக்ரோனும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, தற்போது பிரதமராக உள்ள Sébastien Lecornu, 26% சதவீத பிரபலத்தன்மையை கொண்டுள்ளார். அவர் பதவி விலகல் கடிதம் கொடுத்து, மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரது செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வினை Le Figaro ஊடகத்துக்காக sondage Verian எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. 18 வயது நிரம்பிய 1,010 பேர் இதில் பங்கேற்றிருந்தனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan